உக்ரேன்-ரஷ்யா பதட்டம் அடுத்த வாரம் அமெரிக்கா பதிலளிக்கும்!!


உக்ரைன் நெருக்கடி ஐரோப்பாவில் நேட்டோ நிலைகள் குறித்த ரஷ்யாவின் கோரிக்கைகளுக்கு அடுத்த வாரம் எழுத்துப்பூர்வமாக பதிலளிக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது. சுவிஸ் ஜெனீவாவில் நடைபெற்ற உக்ரைன் தொடர்பான இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தைக்குப் பிறகு ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் தனது அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனுடன் இரண்டு மணிநேர கலந்துரையாடல் நடைபெற்றது. இப்பேச்சுக்கள் ஆக்கபூர்வமானதும் பயனுள்ளதும் என்று ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் விவரித்தார்.

எவ்வாறாயினும், எழுத்துப்பூர்வ பதிலளிப்பதற்கான வாஷிங்டனின் வாக்குறுதியை நேர்மறையான நடவடிக்கையாக வகைப்படுத்த அவர் மறுத்துவிட்டார்.

நாம் சரியான பாதையில் செல்கிறோமா இல்லையா என்பதை என்னால் சொல்ல முடியாது. அமெரிக்க பதில்களைப் பெறும்போது பார்ப்போம், என்று அவர் மேலும் தகவல் வெளியிட்டுள்ளார். 

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உக்ரேனிய எல்லையில் ஏற்பட்ட நெருக்கடியைத் தணிக்க முற்பட்ட பேச்சுக்கள் சுவிஸ் நகரில் நடந்த முதல் சுற்று விவாதங்கள் சிறிதளவு பலனைத் தராமல் 11 நாட்களுக்குப் பிறகு இப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

உக்ரைன்- ரஷ்யா எல்லையில் சுமார் 100,000 துருப்புக்களை குவித்துள்ளது. மற்றும்  ரஷ்யா ஒரு படையெடுப்பிற்கு திட்டமிட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது. அதை ரஷ்யா மறுக்கிறது.

அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் உக்ரைன் ஊடாக ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை நடத்துகின்றன என ரஷ்யா குற்றம் சாட்டுகிறது.

நேட்டோவில் உக்ரேனிய உறுப்புரிமைக்கு நிரந்தர தடை விதிக்கப்பட வேண்டும் என்று ரஷ்யா விரும்புகிறது. ஆனால் உகரைனோ நேட்டோவில் சேர விரும்புகிறது.

அத்துடன் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள பெரும்பாலான அமெரிக்க மற்றும் அதன் கூட்டு இராணுவப் பிரசன்னத்தை அகற்ற வேண்டும் என ரஷ்யா வலியுத்துகின்றது.

வாஷிங்டன், பிரஸ்ஸல்ஸ் மற்றும் நேட்டோ இந்த கோரிக்கைகளை நிராகரித்துள்ளன மற்றும் உக்ரைன் மீதான எந்தவொரு தாக்குதலும் விலையுயர்ந்த விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளன.No comments