ஐ.எஸ் தாக்குதலில் 11 ஈராக்கியப் படையினர் பலி!!


ஈராக்கில் இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11 ஈராக்கியப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் தலைநகர் பாக்தாத்தின் 120 கிலோமீட்டர் தொலைவில், வடக்கே தியாலா மாகாணத்தில் அல்-அசிம் மாவட்டத்தில் மலைப்பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமை உடைத்துக்கொண்டு அங்கு உறங்கிக்கொண்டிருந்த படையினர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அண்மைய மாதங்களில் ஈராக் இராணுவத்தை குறிவைத்து நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல்களில் ஒன்றாகும்.

இஸ்லாமிய அரசு குழு 2017 இல் நாட்டில் தோற்கடிக்கப்பட்டது. இருப்பினும் அது பல பகுதிகளில் ஸ்லீப்பர் செல்கள் மூலம் இயங்கி வருகின்றது. 

சுன்னி முஸ்லீம் தீவிரவாதக் குழுவைச் சேர்ந்த போராளிகள் இன்னும் பாதுகாப்புப் படைகள், மின் நிலையங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல்களை நடத்திய வருகின்றனர்.

No comments