கிளியில் பெண்களது உடலங்கள் மீட்பு!கிளிநொச்சி தர்மபுரம் புன்னைநீராவிப் பகுதியில் கொலை செய்யப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரு பெண்களது உடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

புன்னை நீராவி நாதன் திட்டம் பகுதியில் வசிக்கும்  தாயும் மகளுமே இவ்வாறு  தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

ஆனந்தராசா சீதேவி (வயது 47) மற்றும் அவரது மகளான ஆனந்தராசா லக்சிகா((வயது 17) ஆகிய இருவருமே கொலை செய்யப்பட்ட நிலையில் எரியூட்டப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.

நேற்றிரவு இவர்கள் கொலை செய்யப்பட்ட பின்னராக குடியிருப்பிற்கு தீவைக்கப்பட்டுள்ளது.

சம்பவ நேரம் ஆண்கள் வீட்டில் இருந்திருக்கவில்லையெனவும் தொழில் நிமித்தம் வெளியில் தங்கியிருந்ததாக கூறப்படுகின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக அரங்கேறிவரும் கொலைகள் அச்சமான சூழல் ஒன்றை தோற்றுவித்துள்ளது.

OLD NEWS

கிளிநொச்சி மாவட்டம் தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட புன்னைநீராவிப் பகுதியில் கொலை செய்யப்பட்டதாக சந்தேகப்படும் இரு உடல்கள் சற்று முன்னர் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

புன்னை நீராவி நாதன் திட்டம் பகுதியில் வசிக்கும்  தாயும் மகளுமே இவ்வாறு  தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இதே நேரம் இருவரும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தர்மபுரம் பொலிசார் தீவிர விசாரணையில. ஈடுபட்டுள்ளனர்.No comments