கொழும்புக்கு திறக்கப்பட்டது யாழ்??யாழ். வர்த்தக கண்காட்சியில் உள்ளூர் உற்பத்திகளை புறந்தள்ளிவிட்டார்களா என்ற கேள்வி எழுகிறது.

யாழ்.வர்த்தக கண்காட்சி உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிப்பதாக இருக்க வேண்டும். இடங்களுக்கு அதிக விலை கொடுக்க வேண்டி இருக்கிறது என்ற காரணத்தை வர்த்தக கண்காட்சி நடத்துபவர்கள் காரணம் கூறலாம். இடங்களை எடுக்கும் போது உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் விதத்தில் இடங்களை எடுக்க வேண்டும். அது இல்லாது போனால் உள்ளூர் உற்பத்திகளின் பெருக்கத்தை வர்த்தக  கண்காட்சி ஈடுசெய்யுமா என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கும்.

ஊடக சந்திப்புகளில் உள்ளூர் உற்பத்திகளுக்கு முன்னுரிமை என்று வர்த்தக கண்காட்சியை நடத்துபவர்கள்  கூறுகிறார்கள். இதனை நீங்கள் பேச்சளவில் இல்லாமல் செயலளவில் கொண்டுவர வேண்டும் என்று உள்ளூர் உற்பத்தியாளர்கள் கேள்வி கேட்கின்றன.

யாழில் வர்த்தக கண்காட்சியை நடத்துபவர்கள் உள்ளூர் உற்பத்திக்கு முதலிடம் வழங்க வேண்டும். அதன் பின் தான் வெளிக் கம்பனிகளுக்கு வழங்க வேண்டும். யாழ்.வர்த்தக கண்காட்சியில் வெளிக் கம்பனிகள் முன் பக்கமாக காட்சிப்படுத்தப்பட்டு உள்ளூர் உற்பத்தி நிறுவனங்கள்  பின்தள்ளப்பட்டுள்ளன. உள்ளூர் உற்பத்தி நிறுவனங்களுக்கு ஒழுங்கான முறையில் வெயில் படாத அளவுக்கு கூரைகளும் அமைக்கப்படவில்லை. இதனை கவனத்தில் எவரும் எடுக்கவில்லையா. அல்லது உள்ளூர் உற்பத்தி நிறுவனங்கள் தான் பின்னுக்கு இருக்கட்டும் என்று விட்டுவிட்டீர்களா என்ற சந்தேகம் எழுவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

யாழில் இடம்பெறும் வர்த்தக கண்காட்சியில் உள்ளூர் உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்களாக இருந்தால் இந்த கண்காட்சி பெரிய அளவிற்கு செல்லும் என்பதில் ஜயம் இல்லை.No comments