3 அணுமின் நிலையங்கள் மேல் ஆளில்லா விமானங்கள்! விசாரணைகள் தொடங்கியது சுவீடன்!!


கடந்த வாரம் நாட்டின் மூன்று அணு மின் நிலையங்களுக்கு மேல் அல்லது அதற்கு அருகில் சுற்றிக் கொண்டிருந்த ட்ரோன்கள் குறித்த ஆரம்ப விசாரணையை ஆரம்பமாகியுள்ளது என ஸ்வீடனின் உள்நாட்டு பாதுகாப்பு நிறுவனம் கூறியது.

முதலில், ஸ்டாக்ஹோமுக்கு வடக்கே ஃபோர்ஸ்மார்க், தென்கிழக்கில் ஆஸ்கார்ஷாம் ஆகிய இரண்டு அணுமின் நிலையங்களின் மீது ட்ரோன்கள் பறந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

மூன்றாவது அணுசக்தி நிலையமான ரிங்ஹால்ஸ் மீதும் மூன்றாவது ட்ரோன் பறந்தாக பதிவாகியுள்ளது.

No comments