புலம்பெயர் தரப்புடன் பேச அழைக்கிறார் கோத்தா!



 பிரிட்டனில் உள்ள புலம்பெயர்  சமூகத்துடன் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திதருமாறு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய இராச்சியத்தின் தென்னாசியா மற்றும் பொதுநலவாயத்திற்கான அமைச்சர் தாரிக் அகமட்டிடம் இலங்கை ஜனாதிபதி  கோத்தபாய ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரித்தானிய அமைச்சரை இன்று இலங்கை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்த வேளை ஜனாதிபதி இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இலங்கை எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதுடன், மக்கள் அனைவரும் ஒன்றாக வாழக்கூடிய சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். அதற்கு, ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கின்ற புலம்பெயர் இலங்கையர்களுடன் இணைந்துச் செயற்பட விருப்பம் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அதற்காகப் புலம்பெயர் மக்களுடன் கலந்துரையாடச் சந்தர்ப்பம் வழங்குமாறும் லோர்ட் தாரிக் அஹமட் அவர்களிடம் இலங்கை ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

No comments