பிரான்சில் பறவைக் காய்ச்சல்! 2.5 மில்லியன் பறவைகளைக் கொல்ல உத்தரவு!


பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2.5 மில்லியன் விலங்குகளை அழிக்க பிரான்ஸ் அரசாங்கம் விவசாயிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

நாட்டின் தென்மேற்கில் இப்போது ஒரு மில்லியனுக்கும் அதிகமான பறவைகள் வெட்டப்பட வேண்டும் என்று பிரெஞ்சு விவசாய அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

226 வெவ்வேறு நகரங்களில் உள்ள பண்ணைகளில் உள்ள வாத்துகள், கோழிகள் மற்றும் வான்கோழிகள் என அனைத்தும் அடுத்த மூன்று வாரங்களுக்குள் அழிக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளது.

பறவைக் காய்ச்சல் வேகமாகப் பரவிய பிறகு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த நவம்பர் பிற்பகுதியிலிருந்து சுமார் 1.2 மில்லியன் பறவைகள் ஏற்கனவே கொல்லப்பட்டுள்ளன.

ஒவ்வொரு முறையும் பறவைகள் கொல்லப்படும்போதும் அதற்கான இழப்பீட்டை பிரஞ்சு அரசாங்கம் வழங்கப்படுகிறது.

No comments