அரசாங்கத்திலிருந்து வெளியேற தயார்?ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய குழு தீர்மானித்தால் எந்தவேளையிலும் ராஜபக்ச அரசாங்கத்திலிருந்து வெளியேற தயார் என இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண தெரிவித்துள்ளார்.

நாங்கள் எப்போதும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலேயே இருந்துள்ளோம் சுதந்திரக்கட்சி என்பதுவெறுமனே 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமல்ல,கட்சிக்கு என மத்தியகுழு நிறைவேற்று குழு உள்ளது. அதனடிப்படையில் மத்திய குழு தீர்மானித்தால் நாங்கள் அதன் முடிவுக்கு கட்டுப்படுவோம் என அவர் தெரிவித்ளதுள்ளார்.

மூன்று மாதத்திற்கு முன்னரே நான் இதனை மத்திய குழுவிற்கு சமர்ப்பித்துள்ளேன்,ஆனால் நாங்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் சேரமாட்டோம்,நாங்கள் தாமரை மொட்டிடமும் செல்லமாட்டோம் நாங்கள் சுதந்திரக்கட்சியாகவே இருப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments