சாம் இற்கு வந்ததே கோபம்:புல்லரித்துப்போனது?தனது தள்ளாத வயதிலும் இரா.சம்பந்தனிற்கு வந்திருந்த கோபம் கொழும்பு மற்றும் தமிழரசு தரவு ஊடக வட்டாரங்களை புல்லரிக்க வைத்துள்ளது.

கோட்டாபய ராஜபக்ச உரையாற்றிக் கொண்டிருந்தபோது மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த சம்பந்தன் தனது ஆசனத்தில் இருந்து எழுந்து சென்றார் எனவும், நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவை நேரில் கண்டு, 'நீங்கள் ஏமாற்றிவிட்டீர்கள்' என ஆவேசமாக ஏசினாரெனவும் கதைகள் பல வெளிவந்தவண்ணமுள்ளன.

பசில் ராஜபக்சவுக்குச் சம்பந்தன் ஆவேசமாக ஏசியதைத் தான் நேரில் அவதானித்ததாக அந்த நாடாளுமன்றச் செய்தியாளர் கூறியதாகவும் இத்தரப்புக்கள் கதை சொல்லியுள்ளன.

கொள்கை விளக்கவுரையில் தமிழ் மக்களின் பிரச்சினைத் தீர்வு விவகாரங்கள் அதற்கான நகர்வுகள் பற்றி கோட்டாபய ராஜபக்ச நிச்சியமாக ஏதாவது கருத்து வெளியிடுவார் என்ற நம்பிக்கையோடு சம்பந்தன் சபைக்கு வந்திருந்தாரெனவும், ஆனால் உரையில் எதுவுமே கூறப்படாததால் ஆத்திரமடைந்த நிலையில் பசில் ராஜபக்சவுடன் தர்க்கப்பட்டதாகவும் அந்தச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.


குறிப்பாக இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்குக் கடிதம் அனுப்பும் விவகாரத்தின் பின்னணியில், கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை விளக்கவுரையில் அரசியல் தீர்வு குறித்த விடயங்கள் வெளிவரலாமெனச் சம்பந்தன் எதிர்பார்த்திருந்தாரெனக் கொழும்பு உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

கொள்கை விளக்கவுரை இடம்பெற்றபோது சபாநாயகர் கலரியில் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இருந்ததாகவும், ஆனால் அமெரிக்கா, பிரித்தானியா, கனடா ஆகிய நாடுகளின் தூதுவர்கள் பங்குபற்றவில்லையெனவும், மாறாக இராண்டாம் நிலை இராதந்திரிகளே பங்குபற்றியிருந்தாகவும் நாடாளுமன்றச் செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் மனித உரிமை மீறல்கள் எதுவுமே இடம்பெறுவதற்கு இடமளிக்கவில்லை என்றும், அவ்வாறான விடயங்களுக்கு இனியும் இடமளிக்கப் போவதில்லை எனவும் கோட்டாபய ராஜபக்ச தமது கொள்கை விளக்க உரையில் தெரிவித்துள்ளார்.
No comments