நல்லாட்சியில் முடியாததை இப்போது முடியாது!

 யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கு செல்லும் பிரதான வீதி தொடர்பில் கடந்த நல்லாட்சி அரசில் கூட பேசப்பட்டு தீர்வு காணமுடியாமல் போயிருந்தது. 

இந்நிலையில் தற்போதைய ஆட்சியில் அது சாத்தியமற்றதென கருத்து தெரிவித்துள்ளார் அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான அங்கயன் இராமநாதன். 

கடந்த ஆட்சியிலேயே விடுவிக்க முடியாமல் இழுபறியில் இருந்த வீதியை 1990 ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்தது போல இனியும்  விடுவிக்க முடியாதென அங்கயன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே அவருடன் பயணித்த வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளர் பொதுமக்களது காணியை விடுவிக்க கோரியிருந்தார்.


No comments