வவுனியா மாவட்ட செயலகமுள்ளும் ஆர்ப்பாட்டம்!

 


காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை இன்றைய தினம் வவுனியாவில் மாவட்ட செயலகத்தினுள் நடைபெற்ற கண்துடைப்பு நடமாடும் சேவை அதிகாரிகளிடம் எமக்கு பணமோ சான்றுதழோ தேவையில்லை. குhணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கான பொறுப்புக்கூறலே தேவையென்பதை தெளிவுபடுத்தியுள்ளனர்.

முன்னதாக  அவர்கள் எவருமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படாததுடன் இலங்கை காவல்துறையினரால் பலாத்காரமாக வெளியேற்றப்பட்டனர்.

இதன் காரணமாக பல மணி நேரமாக இலங்கை காவல்துறைக்கும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிறகுமிடையே முரண்பாடு நீடித்திருந்தது. 

நீண்ட இழுபறியின் பின்னராக நீதிச்சேவை ஆணைக்குழு பிரதிநிதிகள் முன்னராக தமது நிலைப்பாட்டை அவர்கள் வெளிப்படுத்திய பின்னர் வெளியேறியிருந்தனர். 

நாளைய தினம் கிளிநொச்சியிலும் வெள்ளி மற்றும் சனிக்கிழமை யாழ்ப்பாணத்திலும் அமர்வுகள் இடம்பெறவுள்ள நிலையில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் யாழ்.நிகழ்வில் பங்கெடுக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.


No comments