மின் சேமிப்பு:வீதி விளக்குகள் ஓய்வு!இலங்கையில்   மின்பாவனையை குறைப்பதற்காக வீதிகளில் உள்ள மின்விளக்குகளை அணைக்க யோசனையொன்று அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.

இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதன்படி, வீதிகளில் உள்ள மின்விளக்குகளை அணைக்கவும், அலுவலகங்களில் உள்ள மின்சாதனங்களை அணைக்கவும் பரிந்துரைகள் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments