வல்வெட்டித்துறை மீனவர்களை காணோம்!

 


வல்வெட்டித்துறையில் இருந்து கடற்றொழிலிற்குச் சென்ற இரு மீனவர்கள் கரை திரும்பவில்லையென கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறையில் இருந்து நேற்று மாலை 3 மணியளவில் 40 குதிரை வலுக் கொண்ட இயந்திரம் பொருத்தப்பட்ட பிளாஸ்ரிக் படகில் பயணித்த இரு மீனவர்களே இதுவரை கரை திரும்பவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

4951 இலக்க படகில் பயணித்த 37 மற்றும் 35 வயதையுடைய வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கரை திரும்பவில்லை என்று கூறப்படுகின்றது.

No comments