கரை ஒதுங்கிய மாணவ சடலங்கள்!மட்டக்களப்பு – கிரான், நாகவத்தை கடலில் தைப்பொங்கல் நாளில்  குளிக்கச்சென்று காணாமற்போன மாணவர்கள் இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகவத்தை கடற்பகுதியில் நேற்று முன்தினம் (14) பிற்பகல் பாடசாலை மாணவர்கள் 7 பேர் நீராடச் சென்றுள்ளனர்.

இதன்போது, மூவர் அலையில் அள்ளுண்டு செல்லப்பட்டதுடன், ஒருவர் காப்பாற்றப்பட்டிருந்தார்.

நீரில் மூழ்கி காணாமற்போயிருந்த ஏனைய இருவரும் நேற்று மாலையும், இரவும் சடலமாக மீட்கப்பட்டனர்.

No comments