டோங்கா அருகே கடலுக்கு அடியில் எரிமலை வெடிப்பு!!


பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள டோங்காவிற்கு அருகே கடலுக்கு அடியே இன்று சனிக்கிழமை எரிமலை வெடித்தது. இதனால் அலைகள் சுனாமி போன்று கரையை நோக்கி உயரமாகவந்து மோதின. இதனால் மக்கள் உயரமான நிலப்பகுதிக்கு விரைந்தனர்.

சிறிய நாடான டோக்கவுடன் தகவல் தொடர்புகள் சிக்கலாக இருப்பதால் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் மற்றும் தேசவிபரங்கள் குறித்து உடனடியாக தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

சமூக ஊடகங்களில் வெளிவந்த காணொளிகள் கடலோரப்பகுதிகளில் பொியளவில் அலைகள் முட்டி மோதி கடல் நீர் வீடுகளுக்குள் நுழைகின்றன.

நியூசிலாந்தின் இராணுவம் நிலைமையை கண்காணித்து வருவதாகவும், தயாராக இருப்பதாகவும், கேட்டால் உதவ தயாராக இருப்பதாகவும் கூறியது.

செயற்கைக்கோள் படங்கள் மிகப்பெரிய வெடிப்பைக் காட்டின. டோங்காவின் அனைத்து பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை அமலில் உள்ளதாக டோங்கா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அருகிலுள்ள தீவு நாடுகளான பிஜி மற்றும் சமோவாவிலும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வலுவான நீரோட்டங்கள் மற்றும் ஆபத்தான அலைகள் காரணமாக கரையோரத்தை தவிர்க்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தினர்.

No comments