பின் வரிசையிலும் பிளவு!ராஜபக்ச அரசின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


குழுவின் அனுமதியின்றி சில உறுப்பினர்கள் தனித்தனியாக ஊடகவியலாளர் சந்திப்புகளை நடத்தியதால் பிளவு ஏற்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்க கடந்த வாரமும் அதற்கு முந்தைய வாரமும் மாதிவெல எம்.பிக்களின் உத்தியோகபூர்வ இல்லத்தில் குழுவைச் சேர்ந்த பலர் தனித்தனியாக ஊடகவியலாளர் சந்திப்புகளை நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இதேவேளை, புலனாய்வு அறிக்கையின் அடிப்படையில் சுசில் பிரேமஜயந்தவை இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியதாக பின்வரிசை உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்த கருத்துக்கு பின்வரிசை உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments