வீட்டுக்கு விரட்டுவோம்:சஜித்!2022ஆம் ஆண்டு பல எதிர்பார்ப்புக்களுடன் பிறக்கின்றது. இந்த ஆண்டின் ஆரம்பத்திலேயே ராஜபக்ச குடும்ப அரசை வீட்டுக்கு விரட்டியடிக்க அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்."- இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-"இந்த அரசின் சர்வாதிகார ஆட்சியால் நாட்டு மக்கள் இன்று வறுமையின் பிடியில் சிக்கித் தவிர்க்கின்றனர். எத்தனையோ வலிகளையும், வேதனைகளையும், கஷ்டங்களையும் தாங்கிக்கொண்டு புதிய ஆண்டில் மக்கள் காலடி எடுத்து வைக்கின்றனர்.

2022ஆம் ஆண்டு கொடுங்கோல் ஆட்சி நடத்தும் ராஜபக்ச குடும்ப அரசுக்கு முடிவு கட்டும் ஆண்டாக அமைய வேண்டும்.

இந்த அரசு ஆட்சியில் நீடித்தால் பட்டினியால் மக்கள் நாள்தோறும் செத்துமடியும் நிலைமை ஏற்படும். எனவே, இந்த அரசை இந்தப் புதிய ஆண்டின் ஆரம்பத்திலேயே வீட்டுக்கு விரட்டியடிக்க அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்" - என்றார்.

No comments