மீண்டும் மீண்டும் சளராது அமைச்சரவை மாற்றமாம்!பொருளாதார நெருக்கடிகளுள் சிக்குண்டுள்ள இலங்கை அமைச்சர்களை மாற்றுவதன் மூலம் மீண்டு எழுமென பிரச்சாரங்களை முன்னெடுத்துள்ளது.

ஏற்கனவே ஏழு அறிவு கொண்ட பஸிலை நிதியமைச்சராக்குவதன் மூலம் பொருளாதார மீள்ச்சியினை  கொண்டுவரப்போவதாக பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்ட போதும் அதிசயங்கள் ஏதும் நடந்திருக்கவில்லை.

இந்நிலையில் மீண்டும் எதிர்வரும் நாட்களில் அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதற்கமைய, சில பிரபல அமைச்சுப் பதவிகளில் மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் நம்பப்படுகின்றது.

வெளிநாடு சென்றுள்ள நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஸ நாடு திரும்பியதுடன், இந்த அமைச்சரவை மாற்றங்கள் இடம்பெறும் என்பதுடன், புதிய வருடத்தில் புதிய மாற்றங்களுடன் அரசாங்கம் புதிய பயணத்தை ஆரம்பிக்க வேண்டுமென, ஆளுங்கட்சியின் உறுப்பினர்கள் பலர், கடந்த வாரங்களில் ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கைக்கு அமையவே இந்த மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments