காவல்துறை தாக்குதலில் தமிழ் இளைஞர்கள் காயம்!

வல்வெட்டித்துறை பொலிஸார் நடத்திய தாக்குதலில் காயமடைந்த இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரணவாய் வடக்கு,கொற்றாவத்தை பகுதியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

மேற்படி பகுதியில் அண்ணன் தம்பிக்கு இடையில் முரண்பாடு ஒன்று இடம் பெற்றுள்ளது.

குறித்த முரண்பாடு தொடர்பாக கடந்த சனிக்கிழமை வல்வெட்டித்துறை பொலிஸில் சகோதரன் ஒருவன் முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பில் விசாரிக்கவென அழைத்த வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலில் இருவர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரியவருகிறது.

No comments