டக்ளஸிற்கும் வந்தது கோபம்!

அரசின் தவறான தீர்மானங்களினால் எமது மக்களுக்குப் பாதிப்புக்கள் ஏற்படுமாக இருந்தால் அதற்கு எதிராக போராடப்போவதாக தெரிவித்துள்ளார் அரசஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.

வடமராட்சி கிழக்கில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் மக்களின் பாவனைக்கு தடை செய்யப்பட்டுள்ள காணிகள் தொடர்பிலேயே அவர் உணர்ச்சி வசப்பட்டுள்ளார்.

வடமராட்சி கிழக்கு, முள்ளியான், கட்டைக்காடு கிராமத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சட்டவிரோதச் செயற்பாடுகள் அனைத்தையும் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், எமது மக்களின் வாழ்வாதாரத்தினை பாதிக்கும் இந்தியக் கடற்றொழிலாளர்களின் செயற்பாடுகள் தொடர்பாக இறுக்கமான நிலைப்பாட்டில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மக்களது பல்லாயிரக்கணக்கான காணி வடக்கில் வன வளத்திணைக்களத்தால் சுவீகரிக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சரது கருத்து வெளியாகியுள்ளது.

இதனிடையே படையினரால் தாய்,தந்தை கொல்லப்பட்ட நிலையில் பேர்த்தியுடன் வாழும் சிறுகுழந்தைகள் இரண்டிற்கு உதவியும் வழங்கியிருந்தார்.


No comments