மனைவி சொல்லியே மகிந்தவிற்கு தெரிகிறது!இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து சுசில் பிரேம ஜயந்த நீக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வின் பாரியார் சிராந்தி ராஜபக்ஷவே மஹிந்த ராஜபக் ஷவிடம் தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.


சுசில் பிரேமஜயந்தவுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடும் போது, நீங்கள் இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமை வருத்த மளிப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவரிடம் தெரிவித்துள்ளார்.


சுசில் பிரேமஜயந்தவை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கியதையடுத்து, அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் அவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்தச் சம்பவம் தொடர்பில் வருத்தம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

No comments