கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு


முல்லைத்தீவு - முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, பூதன்வயல் பகுதியிலுள்ள கிணறொன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பூதன்வயல் பகுதியைச் சேர்ந்த யோகராசா ரஜினி (வயது 39)  என்பது பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த பகுதிக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா மற்றும் சட்டவைத்திய அதிகாரி, திடீர் மரண விசாரணை அதிகாரி, தடயவியல் பொலிஸார், முள்ளியவளைப் பொலிஸார் ஆகியோர் வருகைதந்து தமது விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

விசாரணைகளைத் தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட நீஜிபதி ரி.  சரவணராஜா முன்னிலையில் குறித்த சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முள்ளியவளைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments