இலங்கை: முட்டை வீச ஜயாயிரம்?

ஜேவிபி பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவின் வாகனம் மீது முட்டை வீசப்பட்ட சம்பவத்திற்கு மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் சபை உறுப்பினரான மஹிந்த ஜயசிங்க கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தின் பின்னணியில் அரசாங்க அமைச்சர் ஒருவர் இருப்பதாக சந்தேகநபர்கள் தெரிவித்ததாகவும் தெரிவித்தார்.

இதனிடையே  ஜே.வி.பியின் தலைவர் அனுர திஸாநாயக்கவின் கார் மீது தாக்குதல் நடத்திய நபர்களுக்கு 5000 ரூபா பணம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.


தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைதானவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, கொழும்பிலுள்ள வர்த்தகர் ஒருவர் தமக்கு 5000 ரூபாவை கொடுத்து இந்த இடத்துக்கு அனுப்பி வைத்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இருவரையும் பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதனிடையே முட்டைகளை வீசியவர்களில் இருவரை பிரதேசவாசிகள் மற்றும் மாநாட்டில் கலந்து கொண்ட குழுவினர் பிடித்துள்ளனர்.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் கோத்தபாயவின் அவன்கார்ட் நிறுவனத்துடன் தமக்கு தொடர்பு இருப்பதாக சந்தேக நபர்கள் கூறியதாகவும் தெரியவந்துள்ளது.


No comments