வவுனியாவில் ஆணில் சடலம் மீட்பு!!


வவுனியா, ஈரப்பெரியகுளத்தில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (04) மாலை மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா, ஈரப்பெரியகுளம் குளத்திற்கு மீன் பிடிப்பதற்காக தனது வீட்டில் இருந்து சென்றவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த குளத்தில் மீன் பிடிப்பதற்காக காலையில் இருவர் சென்றிருந்தனர். அங்கு மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் தனக்கு இயலாமல் இருப்பதாக கூறி குளத்தில் இருந்து வெளியே சென்றுள்ளார்.

மற்றைய நபர் மீன் பிடித்து முடிந்ததும் குளத்தில் இருந்து வெளியே வந்து வீடு நோக்கி சென்ற போது கூட வந்தவர் குளத்து ஓழுங்கை ஒன்றில் மரணித்த நிலையில் காணப்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வவுனியா, கல்நாட்டியகுளம், மதுரா நகர் பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய செல்வராசா ஜலகுலசராசா என்பரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் குறித்து ஈரப்பெரியகுளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments