உண்மை பேசாதே:பந்தாடப்படும் அதிகாரிகள்!

 
இலங்கையில் விவசாய அமைச்சின் செயலாளர் பதவி விலக்கப்பட்டமைக்கான உண்மையான காரணத்தை அரசாங்கம் தெரிவிக்கவேண்டும் என  ஐக்கியதேசிய கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது

பேராசிரியர் உடித் ஜெயசிங்க பதவிநீக்கப்பட்டமைக்கான உண்மையான காரணத்தை அரசாங்கம் வெளியிடவேண்டும் என தெரிவித்துள்ள ருவான் விஜயவர்த்தன விவசாய துறைதொடர்பில் உண்மையை தெரிவித்தமைக்காகவா? அவர் பதவிநீக்கப்பட்டார் என கேள்வி எழுப்பியுள்ளார்.

உரம் தொடர்பான திடீர் மாற்றம் காரணமாக நெல் அறுவடை மற்றும் ஏனைய விளைச்சல்களில் 75 வீத வீழ்ச்சிஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்த 24 மணித்தியாலங்களில் அவர் பதவி நீக்கப்பட்டுள்ளார் என ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

அறிக்கை வெளியிட்டவுடன் பதவி நீக்கப்பட்டால் அரசாங்க ஊழியர்கள் நிலைகுலைந்து போவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களில் விவசாய அமைச்சின் மூன்று செயலாளர்கள் பதவிநீக்கப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments