இறக்கை கட்டி பறக்கிறது பால்மா!

 
இறக்குமதி செய்யப்படும் பால்மா பொதிகளின் விலை இன்று(31) முதல் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, 400 கிராம் பால்மா பொதியொன்று 60 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 400 கிராம் பால்மா பொதியொன்றின் புதிய விலை 540 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஒரு கிலோகிராம் பால்மா பொதியின் விலை 150 ரூபாயினால் அதிகரிப்பட்டுள்ளது.

இதன்படி, ஒரு கிலோகிராம் பால்மா பொதியொன்றின் புதிய விலை 1,345 ரூபாயாகும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி, இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டது.

இதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மா பொதியின் விலை 250 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 1,195 ரூபாயாக உயர்த்தப்பட்டிருந்தது.

அத்துடன், இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால்மா பொதியின் விலை 100 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு, 480 ரூபாயாக உயர்த்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது

No comments