பூநகரி தவிசாளர் பதவியேற்றார்!பூநகரி பிரதேச சபையின் புதிய தவிசாளராக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மற்றொரு உறுப்பினரான சிறீரஞ்சன் தனது கடமைகளை இன்றைய தினம் காலை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

புதிய தவிசாளரை வரவேற்கும் நிகழ்வும் இன்றைய தினம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. புதிய தவிசாளரை செயலாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் வரவேற்றனர் .

முன்னதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் முன்னிலையில் தவிசாளராக சிறீரஞ்சன் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

இதேவேளை கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் ,பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் உபதவிசாளர் , பூநகரி பிரதேச சபையின் உபதவிசாளர் எமிலியாம்பிள்ளை தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி கிளையின் செயலாளர் விஜயன் பூநகரி பிரதேச சபையின் உறுப்பினர்கள் தமிழரசுக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் சபையின் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர் .

முன்னதாக பதவி வகித்த தவிசாளர் உட்கட்சி மோதல் காரணமாக தோற்கடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments