பூநகரி புதிய தவிசாளராக சிறீரஞ்சன்!

 


பூநகரி பிரதேச சபையின் புதிய தவிசாளராக சிறீரஞ்சன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். தமிழரசுக் கட்சியின் முதன்மை உறுப்பினரும் முழங்காவில் மத்திய மகாவித்தியாலய ஆசிரியருமான சிறீரஞ்சன் அரசியல் மற்றும் சமூகப் பணிகளில் தன்னை அர்ப்பணித்து செயற்பட்டவரென கட்சி வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

இதற்கான வர்த்தமானி நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக தவிசாளராக செயற்பட்ட நபர் நாடாளுமன்ற தேர்தலில் சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராசாவிற்கு பிரச்சாரம் செய்திருந்ததாக தெரிவித்து தோற்கடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments