விமர்சித்தால் அழைப்பில்லை!

 


தென்னிலங்கை ஊடகங்களும் அரசிற்கு எதிராக திரும்பியுள்ள நிலையில் ஆளும் தரப்பு அவர்களை புறக்கணிக்க தொடங்கியுள்ளது.

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பத்திரிகை ஆசிரியர்களை நேற்று  (27) சந்தித்திருந்தார். 

இந்த சந்திப்புக்கு, சில பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. 

ஜனாதிபதியின் ஊடகப் பிரிவில் இருக்கும் சிலர், திட்டமிட்டே இவ்வாறு அழைக்காமல் புறக்கணித்துள்ளனர் என  அறியமுடிகின்றது. 

குறிப்பாக அரசாங்கத்தை விமர்சிக்கும் பத்திரிகைகளின் ஆசியர்களே இவ்வாறு அழைக்கப்படாது புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.


No comments