மீண்டும் கைது வேட்டை!

 


இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி உள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட ஆறு  இந்திய ட்ரோலர் மீன்பிடி படகுகளை நெடுந்தீவுக் கடற்பரப்பில் கடற்படையினர் கைது செய்துள்ளனர். 

இந்திய மீனவர்களின் 6 படகுகளும் 43 மீனவர்களும்  மயிலிட்டித்துறைமுகத்திற்கு  கொண்டு வரப்பட்டுள்ளனர்.  

இதன்போது தென்னரசு, லியோன், பீட்டர், கருப்பைய்யா,பினால்டன் ஆகியோர் செலுத்திச் சென்ற படகுகளே கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அதேநேரம் மீனவர்கள் கொரோனா தடுப்பு இடைத்தங்கல் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.  .

No comments