பாலியல் லஞ்சம்:அகப்பட்டார் மருத்துவர்!ஆளும் தரப்பின் சகபாடிகளுள் ஒருவரான வைத்தியர் நவீன் டி சொய்சா பாலியல் இலஞ்சம் கோரியுள்ளமை அம்பலமாகியுள்ளது.

 புதிய நியமனம் கோரும் பெண் வைத்தியர்களிடம் அரச வைத்திய அதிகாரி அலுவலக வளாகத்தில் விசேட கவனிப்பு நியமனம் வழங்குவதற்கு வைத்தியர் நவீன் டி சொய்சா பாலியல் இலஞ்சம் கோரியுள்ளமை தொடர்பில் சட்ட மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிற்கு அரச வைத்திய அதிகாரிகள் ஒன்றியம் கடிதம் எழுதியுள்ளது.

குறித்த பெண் மருத்துவ அதிகாரி தங்கள் சங்கத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும், சட்ட மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கான ஆதாரங்களை முன்வைக்க அரச மருத்துவ அதிகாரிகள் ஒன்றியம் திட்டமிட்டுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி புதிய பெண் வைத்தியரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சட்ட நடவடிக்கையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறும் கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் ஒன்றியத்தினால் துறைக்குப் பொறுப்பான அமைச்சருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரதிகள் நீதி அமைச்சர், பொதுச்சேவை ஆணைக்குழு மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

No comments