தேவாலயம் இடிந்து பொதுமகன் காயம்!


வெற்றிலைக்கேணி, புல்லாவெளி செபஸ்தியார்  தேவாலய கூரை இடிந்து வீழ்ந்ததில், ஒருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

குறித்த சம்பவம், இன்று (16) காலை 5:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

 வடமராட்சி கிழக்கு - கட்டைக்காடு கிராமத்தைச் சேர்ந்த இளம்தம்பதியினர், தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவதற்காக, நேற்று (15) மாலை 5.30 மணியளவில் அங்கு சென்று  தங்கியிருந்தனர்.

 இந்நிலையில், இன்று காலை வழிபாட்டில் ஈடுபட்ட வேளையிலேயே, இவ்வனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

இச்சம்பவத்தில்,  படுகாயங்களுக்குள்ளாகிய ஒருவர்,   கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆலய முகப்பு இடிந்து விழுந்ததிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.No comments