இராணுவத்தை தண்டிக்கவேண்டும்:சரத்பொன்சேகா!தமிழீழவிடுதலைப்புலிகள் என்ற அடிப்படையில் சிறையில் உள்ளவர்களை விடுவிக்கும் நடவடிக்கையின்போது தம்மை கொலை செய்ய வந்த மொரிஸ் என்பவரை விடுதலை செய்யுமாறு சரத் பொன்சேகா நீதியமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.

இலங்கையின் படையினரில் தவறு செய்பவர்களுக்கு தண்டனை வழங்கவேண்டும்.

அவர்களுக்கு மன்னிப்பு வழங்கக்கூடாது ஜெகத் ஜெயசூரிய ,கபில ஹெந்தவித்தாரண போன்றோர் தவறு செய்துள்ளார்கள் அவர்களுக்கு தண்டனை வழங்குவதன் மூலம் ஏனைய படையினரின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டை தவிர்க்கமுடியும்.

கடற்படையின் முன்னாள்  தளபதி வசந்த கரண்ணாகொட 11 இளைஞர்களை கடத்திச்சென்று கொலை செய்துள்ளார்.

கொலை செய்தவர்களை கொலை செய்து கடலில் வீசியதாக தகவல்கள் உள்ளன. எனவே வசந்த கரணாகொட போன்றவர்களை காப்பாற்றவேண்டாம் என்று பொன்சேகா கேட்டுக்கொண்டார்.


No comments