இரவோடிரவாக வெளியேறிய புத்தர்!

 


பொத்துவில் அக்கரைப்பற்று வீதியில் சங்கமன் கண்டியில் இரவோடு இரவாக வந்திறங்கிய புத்தர் மீண்டும் காணாமல் போயுள்ளார்.

சிங்கள பௌத்தமக்களே இல்லாத இடத்தில்  முழுமையாக தமிழர்கள் வாழும் இடத்தில்  வைக்கப்பட்ட புத்தபெருமானுடைய சிலையை  அகற்றி  சுமுகமான நிலையை உருவாக்க சம்மந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இல்லாது போனால்  வடக்கு கிழக்கு இணைந்து அதற்கு எதிராக தமிழ்தேசியம் பேசும் கட்சிகளுடன் இஸ்லாமிய சகோதரர்கள் மற்றும்  இந்த சிலைவைத்தது பிழை என்று சொல்லும் சிங்கள சகோதரர்களையும் இணைத்து ஜனநாயக ரீதியான போராட்டத்துக்கு தயாராக வேண்டுமென பலரும் அழைப்பு விடுத்திருந்தனர்.

இந்நிலையில் வைத்தவர்களே நேற்றிரவோடு இரவாக புத்தர் சிலையினை எடுத்து சென்றிருப்பதாக தெரியவருகின்றது.


No comments