மோடியினுடைதும் களவாடப்பட்டது!இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு சிறிது நேரத்திற்குப் பிறகு கணக்கு மீட்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கணக்கு மீட்டமைக்கப்படுவதற்கு முன்பு, பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கில் இருந்து ஒரு பதிவு பதிவேற்றப்பட்டுள்ளது. 

குறித்த பதிவில், “இந்தியா மின்னணுப் பணமான பிட்காயினை சட்டபூர்வ நாணயமாக அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்சமயம் கணக்கு மீட்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-IN) ஹேக்கிங் சம்பவத்தின் மூலத்தைக் கண்டறிய முயற்சித்து வருகிறது.

No comments