சுடலை வரை துரத்தும் இலங்கை இராணுவம்!

தவிசாளரான தன்னை சுடலைக்கு செல்ல விடாது துரத்துவதாக கரைச்சி பிரதேசசபை தவிசாளர் கவலை வெளியிட்டுள்ளார்.

கரைச்சி பிரதேசசபையின் ஆளுகைக்கு கீழ் உள்ள ஆனைவிழுந்தான் கிராமத்தில் கடைத் தொகுதி ஒன்றை நிர்மாணிப்பதற்கான ஆரம்பப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.அத்துடன் ஆனைவிழுந்தான் மயான எரி கொட்டகையை மீள் நிர்மாணம்செய்யவும் அங்கு அமைக்கப்பட்டு கொண்டிருக்கும் கிணற்று பணிகளை பார்வையிடவும் வட்டார உறுப்பினர் செல்வநாயகம் அவர்களுடன் இன்றைய தினம். பங்கு கொண்டு இருந்தேன் .

இந்நிலையில் குறித்த நிகழ்வுகள் பற்றி இராணுவம் விசாரணைகளை மேற்கொண்டதுடன் அபிவிருத்தி விடயங்களிலும் இராணுவ தலையீடு தொடர்வது மட்டுமன்றி கிராம மட்டங்களில் மக்கள் ஒவ்வொரு சாதாரண விடயங்களிலும்  கண்காணிக்கப்படும் அச்சுறுத்தப்படும் நிலையில் வாழ்கிறார்கள் என்பதை  பிரதேசசபையின் பணிகளை ஆரம்பித்தபோது அவதானித்தேன் எனவும் தவிசாளர் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.

மீண்டும் வேக வேகமாக மக்கள் வாழ்வியல் இராணுவ மயப்படுத்துவது முனைப்படைந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்களது வாழ்விலை கட்டுப்படுத்த படையினர் மேற்கொள்கின்ற முயற்சிகள் இயல்பு வாழ்வை பாதித்துவருவது குறிப்பிடத்தக்கது.
No comments