வழமைக்கு திரும்பியது மின்சாரம்


நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் தவிர்ந்த ஏனைய அனைத்து மின் உற்பத்தி நிலையங்களினதும் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின் விநியோகத்தை சரிசெய்ய குறைந்தது 2 நாட்களாவது தேவைப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாடு முழுவதும் இன்று முற்பகல் 11.30 முதல் மின் விநியோகம் தடைப்பட்டிருந்தது.

இந்நிலையில் தடைப்பட்டிருந்த  மின்விநியோகம்  இன்று மாலை 4.30 அளவில் வழமைக்கு திரும்பியதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

No comments