கோத்தா ராஜினாமா?

ராஜபக்ச குடும்ப மோதல் உச்சமடைந்துள்ள நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.இவ்விடயம் சமூக வலைத்தளங்களில் பரவலாக செய்திகள் நேற்று (28) வெளியாகியிருந்தன.

எனினும், இந்த அறிக்கையிடல் முழுமையாக பொய்யானது என ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்சிலி ரத்னாயக்க மறுதலித்துள்ளார்.

ஜனாதிபதியினால் எதிர்காலங்களில் எடுக்கப்படும் தீர்மானங்கள், அவருடைய உத்தியோகபூர்வ சமூக வலைத்தளங்களின் ஊடாக அறிவிக்கப்படும்” என்றும் கிங்சிலி ரத்னாயக்க தெரிவித்துள்ளார் .


No comments