ஈழ-தமிழக மீனவர்களிடையே மோதலிற்கு சதி!அத்துமீறிப்பிரவேசித்த போது  கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்கள் படகுகளை உள்ளுர் மீனவர்களிற்கு வழங்குவது மோதல்களிற்கு வழிகோலுமென உள்ளுர் மீனவ அமைப்புக்கள் எச்சரித்துள்ளன.

அத்துமீறிப்பிரவேசித்த போது கைப்பற்றப்பட்ட இந்திய படகுகள் அரச உடமை ஆக்கப்பட்டுள்ளன. இந்தியாவில், அழுத்தங்கள் தெரிவித்தாலும் நாங்கள் இந்திய மீன்பிடி படகுகளை விடுவிக்கமாட்டோம் என அரச கடற்றொழில் அமைச்சர் டகளஸ் தேவானந்தா  தெரிவித்துள்ளார்.

அவ்வாறு கைப்பற்றப்பட்ட இந்திய மீனவர்களின் படகுகளில் இரணைதீவு பகுதி மீனவர்களுக்கு ஒரு படகினை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அந்தப் படகுகள் தற்பொழுது மயிலிட்டித்துறை முகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் தொப்புள் கொடி உறவுகளிடையே மோதலை ஏற்படுத்தும் சதியென மேலும் உள்ளுர் மீனவ அமைப்புக்கள் எச்சரித்துள்ளன.


No comments