ஜேர்மனியில் ஆளுநரைக் கொலை செய்யச் சதி! தீவிவாதிகளை தேடும் காவல்துறை!


கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பூசிகள் தொடர்பாக மாநில ஆளுநரை கொலை செய்வதாகக் கூறப்படும் அச்சுறுத்தல்கள் குறித்து விசாரணைகளை கிழக்கு ஜேர்மனியில் காவல்துறையின்ர் இன்று புதன்கிழமை ஆரம்பித்துடன்  அதிகாலை முதல் சோதனைகளை மேற்கொண்டனர். 

தீவிர வன்முறைச் செயலுக்கான சந்தேகத்திற்குரிய திட்டங்களின் விசாரணையில் டிரெஸ்டனில் உள்ள பல வீடுகள் சோதனையிடப்படுகின்றன.

கடந்த வாரம் ZDF தொலைக்காட்சியில் வெளியான செய்தியின் மூலம் விசாரணை தூண்டப்பட்டது.  டெலிகிராமில் ஒரு குழு சாக்சோனியின் மாநில ஆளுநர் மைக்கேல் கிரெட்ச்மர் மற்றும் மாநில அரசாங்கத்தின் பிற உறுப்பினர்களைக் கொல்லும் திட்டங்களைப் பற்றி விவாதித்தது.

டிரெஸ்டன் சாக்ஸோனியின் தலைநகரம் ஆகும். இது கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளுக்கு எதிராக அடிக்கடி போராட்டங்களைக் கண்டுள்ளது மற்றும் ஜெர்மனியின் குறைந்த தடுப்பூசி விகிதத்தைக் கொண்டுள்ளது.

அறிக்கையின்படி, குழுவின் 103 உறுப்பினர்கள் தடுப்பூசிகள், மாநிலம் மற்றும் தற்போதைய கொரோனா வைரஸ் கொள்கையை நிராகரித்துள்ளனர்.  கிரெட்ச்மர் மற்றும் பிறருக்கு எதிராக தேவைப்பட்டால் ஆயுத பலத்துடன் எதிர்க்க வேண்டும் என்று மக்கள் அழைப்பு விடுக்கும் ஆடியோ செய்திகள் அதில் இடம்பெற்றுள்ளன.

No comments