வந்தார் டக்ளஸ்:பின்னால் நழுவிய தலைவர்கள்!



இந்திய இழுவைப்படகு மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து கடற்றொழிலாளர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் அழைப்பு விடுக்கப்பட்ட போராட்ட பின்னணி தொடர்பில் மீனவ அமைப்புக்களிடையே வாதப்பிரதிவாதங்கள் எழுந்துள்ளன.

தற்போதைய கடற்றொழில் அமைச்சர் டக்ளஸினது பின்னணி தொடர்புடைய தரப்புக்கள் போராட்டத்தின் முன்வரிசையில் நின்றதால் சந்தேகம் எழுந்திருந்தது.

ஒருபுறம் சீன தூதர் அண்மையில் தந்திருந்த நிவாரண பொதிகள் போராட்ட ஏற்பாட்டில் பின்வழியாக உலவியதாக விமர்சனங்கள் இருந்தன.

மேலதிக செலவிற்கு சீன வலைகளும் வெளியில் விற்கப்பட்டதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் ஏ-9வீதியினூடான போக்குவரத்து இன்று காலை முடங்கப்பட்டதுடன் யாழ் மாவட்ட செயலகமும் முற்றுகையிடப்பட்ட நிலையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அக்கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர் செ.கஜேந்திரன் பிரசன்னமாகியிருந்தனர்.

இந்நிலையில் திட்டமிட்ட படி வீதி மறியல் நடந்துகொண்டிருக்கையில் டக்ளஸ் வந்து சமரப்படுத்த குதிக்க தலைதெறிக்க ஓடினர் காங்கிரஸ் தரப்பினர்.

அரச அமைச்சர் டக்ளஸ் வழங்கிய உறுதி மொழியை அடுத்து போராட்டம் விலக்கப்பட்டிருந்தது.


No comments