13க்கு செல்வம், குமாரசாமி காவடி! பின்னால் அரசு இருப்பது அம்பலம்!

இனப்பிரச்சினையினை தீர்க்க 13தான் தீர்வென சுரேன் குருசாமி மற்றும் செல்வம் அடைக்கலநாதன் பலரும் காவடியெடுக்க பின்னால் இருப்பது அரசே என்பது அம்பலமாகியுள்ளது.

வழமையாக தமிழ் அரசியல் தலைவர்களிற்கு பாதுகாப்பென்ற பேரில் புலனாய்வு அதிகாரிகள் நியமிக்கப்படுவது வழமை. அவ்வாறு நியமிக்கப்பட்ட புலனாய்வு அதிகாரிகளை விருந்தினராக வைத்து பொது ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதனை விட மேலுமொரு படி சென்று இன்றும் இலங்கை புலனாய்வு தரப்புடன் நெருங்கிய உறவை கொண்டுள்ள தராகி சிவராம் கொலையாளி ஆர்.ஆர் எனப்படும் இராகவன் புளொட் சார்பில் முக்கிய பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கி  ஆவணத்தை தயாரித்துள்ளனர்.

இதனால் இலங்கை தமிழரசு கட்சி தீர்மானித்துள்ள நிலையில் தமிழ் பேசும் கட்சிகள் கலந்துரையாடலின் இன்றும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.

5 பக்க ஆவணமொன்றை இன்று கூட்டத்தில் ரெலோ கையளித்திருந்த நிலையில் அதில் வரலாற்றுத் தவறுகள், விடுபடல்கள் காணப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டது.

இறுதியில் ரெலோ தயாரித்த ஆவணத்தையும், இலங்கை தமிழரசு கட்சி தயாரித்த ஆவணத்தையும் கொண்டு, புதிய ஆவணமொன்றை தயாரிப்பதென முடிவாகியுள்ளது.

தற்போது புதிய வரைபை தயாரிக்கும் பணியில் சிறிகாந்தா, சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.

இருப்பினும் இந்த வரைபை படித்து பார்த்த பின்னர், கையெழுத்திடுவதா இல்லையா என்பதை முடிவு செய்வதாக இரா.சம்பந்தன் தெரிவித்து வெளியேறிவிட்டுள்ளார்.

நாளை அல்லது நாளை மறுதினம் கையெழுத்து பெற்றுக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனிடையே மேற்குலகின் இலங்கை தொடர்பான நிகழ்ச்சி நிரலில், தமிழர் விவாகாரம் முக்கியத்துவம் மிக்கதொன்று. அதிலும், அந்த நாடுகளின் குடிமக்களாக இருக்கும் புலம்பெயர் இலங்கை தமிழர்கள், இலங்கை தமிழர் விவகாரம் தொடர்பில் கொடுக்கும் அழுத்தங்களைச் சமாளிக்க வேண்டிய அவசியமும் அவர்களுக்கு இருக்கிறது.

அதன் ஒரு முயற்சியே பஸிலின் வழிநடத்தலில் சுரேன் குருசாமி தரப்பால் முன்னெடுப்பது உறுதியாகியுள்ளது. 


No comments