13வது உயிரூட்ட கூட்டம் சாமிற்காக கொழும்பில்!

 13வது திருத்த சட்டத்திற்கு உயிர்கொடுக்கும் தரப்புக்களது கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் ஒருவாறாக இரா.சம்பந்தன் தலைமையில் இன்று ஞாயிறு காலை 11.00 மணிக்கு கொழும்பில் நடைபெற்றுள்ளது.

தற்போது கூட்டமைப்பிற்கு உரிமை கோரும் ரெலோவின் ஒருங்கமைப்பில் இக்கூட்டம் நடந்துள்ளது.

கடந்த மாதம் 02ம் திகதி யாழ்ப்பாணம் திண்ணையில் நடந்த சந்திப்பின் தொடர்ச்சியாக இக்கூட்டம் நடைபெற்றிருந்தது.

13வதற்கு காவடி தூக்க புறப்பட்டு வீழ்ந்த அடியினை தொடர்ந்து சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வே எமது உறுதியான நிலைப்பாடு. அதுவே எமது அரசியல் இலக்கு. அதில் ஒருபோதும் விட்டுக் கொடுப்புக்கு இடம் இல்லை.

ஆனால் ஏற்கனவே அரசியல் அமைப்பில் உள்ள 13யு முற்றுமுழுதாக நடைமுறைப்படுத்த அதன் காரணகர்த்தாவான இந்தியாவிடம் கோரிக்கை வைக்க வேண்டும் என்ற கருத்தோடு இக்கூட்டம் நடைபெற்றதாக அறிவிக்கப்படடுட்டுள்ளது.


No comments