ரவிராஜ் மகளை வாழ்த்திய சுமா!அரசியலில் நிரந்தர எதிரிகள் நண்பர்கள் என எவருமே இருப்பதில்லை.அது தமிழரசிலும் சாதாரணமானது.

தனது தாயை தோற்கடித்ததாக யாழ்.மத்திய கல்லூரியில் அமைந்திருந்த வாக்கெண்ணும் நிலையத்தில் எம்.ஏ.சுமந்திரனிற்கு எதிராக கொதித்தெழுந்த மாமனிதர் ரவிராஜ் மகளது திருமணத்தில் பங்கெடுத்துள்ளார் எம்.ஏ.சுமந்திரன்.

தமிழரசு தலைவர் மாவை சேனாதிராசாவின் மகனும் முன்னாள் இளைஞரணி முக்கியஸ்தருமாக தமிழமுதன் திருமணத்தில் எம்.ஏ.சுமந்திரனும் .இரா.சாணக்கியனும் பங்கெடுத்திருந்தனர்.

கூடவே கிழக்கிலிருந்து முன்னாள் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவையின் வெளிநாட்டிலுள்ள  மகன்கள் புகைப்படப்பிடிப்பில் கலந்து கொண்ட போதும் மாமனிதர் ரவிராஜின் மனைவியும் சுமந்திரனால் வெளியில் விடப்பட்டவருமான சசிகலா நாசுக்காக காய்வெட்டிக்கொண்டுள்ளார். 


No comments