குருசாமி சுரேன் கூட்டத்தில் பங்காளிகள்

13வது திருத்த சட்டத்திற்கு புத்துயிர் கொடுத்து தமிழ் மக்கள் தலையில் மிளகாய் அரைக்க இந்திய தூதரக நிதியில் ஒன்று கூடியுள்ளன தமிழ் கட்சிகள் 

தமிழீழ விடுதலை இயக்கமான டெலோ தற்போது செல்வம் பிரிவு மற்றொரு புறம் குருசாமி சுரேன் பிரிவென பிளவுபட்டுள்ள நிலையில் சுரேன் குருசாமி ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று 2ம் திகதி கூட்டமொன்று திண்ணை விடுதியில் கூட்டப்பட்டுள்ளது.

ஆயினும் 13வது திருத்த சட்டத்தை அமுல்படுத்த கோரும் கூட்டத்தை தமிழரசுக்கட்சி புறக்கணித்துவிட்ட போதும் மனோகணேசன்,ஹக்கீம் தரப்பினர் வருகை தந்து பங்கெடுத்திருந்தனர்.

முன்னதாக இந்தியத் தூதுவர் கோபால் பால்கிலே மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து  இன்றைய கூட்டம் பற்றி பேசியிருந்தார்.

எனினும் குருசாமி சுரேன் கூட்டத்தில் முன்னாள் பங்காளிகளான சிறீகாந்தா முதல் செல்வம் அடைக்கலநாதன் வரை பங்கெடுத்திருந்தனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தரப்புக்களும் கூட்டத்தில் பங்கெடுத்திருக்கவில்லை.

No comments