அருட்தந்தை கைது செய்யப்படமாட்டார்!!


தற்போது அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோவை கைது செய்வது தொடர்பில் எவ்வித தீர்மானமும் இல்லை என குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று (08) சட்டமா அதிபர் ஊடாக உயர் நீதிமன்றத்திடம் அறிவித்துள்ளனர்.

தன்னை கைது செய்வதை தடுக்கும் உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னர் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்படும் என நீதிமன்றத்திடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ சார்ப்பில் நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி ரியன்ஸி அர்சகுலரத்ன, விசாரணைக்கான அழைக்கும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராக தனது கட்சிக்காரர் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

No comments