பிரான்சில் கத்திக்குத்து! காவல்துறை உறுப்பினர் படுகாயம்!!

பிரான்சின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கேன்ஸ் நகரில் இன்று திங்கட்கிழமை நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் பிரஞ்சுக் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

காவல் நிலையத்திலிருந்து காவல் ரோந்துக்குப் புறப்படுவதற்குத் மகிழுந்து ஒன்றில் அமர்ந்து கொண்டிருந்து காவல்துறையினரை நோக்கிச் சென்ற நபர் மகிழுந்தின் முன் கதவை திறந்து இருக்கையில் இருந்த காவல்துறை உறுப்பினரைக் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து மற்றைய முன் இருக்கையில் இருந்த காவல்துறை உறுப்பினரைக் கத்தியால் குத்துவதற்கு முற்பட்ட தாக்குதலாளியை நோக்கி பின் இருக்கையில் இருந்த காவல்துறை உறுப்பினர் தனது துப்பாக்கியால் சுட்டுட்டுள்ளார்.


நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் தாக்குதலாளி அந்த இடத்தில் படுகாமடைந்தார். 

இச்சம்பவத்தைத் தொடர்ந்து அதிகளவான காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர். காயமடைந்தவர்கள் மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

காவல்துறை உறுப்பினர்கள் குண்டு துழைக்காத கவச அங்கிகளை அணிந்திருந்தமையால் உயிர் தப்பியுள்ளனர்.

தாக்குதலாளி தாக்குதலின் போது நபிகள் நாயகத்தைக் குறிப்பிட்டு மதக் கோஷங்களை எழுப்பினார். கேன்ஸில் உள்ள மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிற்சை பெற்று வருகிறார்.

தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பிரான்சின் சிறப்பு பயங்கரவாத எதிர்ப்பு மாஜிஸ்திரேட்கள்  விசாரணைக்கு தலைமை தாங்குகிறார்கள் என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.


 

No comments