சுரேஸ் சாலியை அம்பலப்படுத்திய அருட்தந்தை?இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவின் பிரதானியான சுரேஸ் சாலியை அம்பலப்படுத்திய அருட்தந்தை சிறில் காமினி கைது செய்யப்படமாட்டார் என குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் சட்டமா அதிபர் திணைக்களத்தினூடாக உயர் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பின்னணியாக உள்ள இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவின் செயற்பாட்டை அம்பலப்படுத்தியதை தொடர்ந்து கைதுக்கான முயற்சி ஆரம்பமாகியுள்ளது.

இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவின் பிரதானியான சுரேஸ் சாலி என்பவனே வடகிழக்கில் கொலைகள்,ஆட்கடத்தல்கள் என பலவற்றிலும் பின்னணியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments