10 பொலிஸ் அதிகாரிகளிற்கு கொரோனா!மொனராகலை மாவட்டத்தின் படல்கும்புர பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றும் 10 பொலிஸ் அதிகாரிகளுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனக் குடாஓயா மேலதிக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டப்ள்யூ.எம். தனபால தெரிவித்துள்ளார்.

தொற்றுக்குள்ளான அதிகாரிகளில் பொலிஸ் கான்ஸ்டபிள் உள்ளிட்ட அதிகாரிகளும் உள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

10 பொலிஸ் அதிகாரிகளும் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா் எனவும் குடாஓயா மேலதிக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

No comments