சி.வி சொன்னதை செய்யவேண்டும்!சி.வி.விக்கினேஸ்வரன் தனது தேர்தல் வாக்குறுதியுடன் நிலைத்திருக்க வேண்டுமென தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சி.வி.விக்கினேஸ்வரன் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் சர்வஜன வாக்கெடுப்பு கோரினார். இப்போது சர்வஜன வாக்கெடுப்பை கைவிட்டு சமஸ்டி  நிலை கேட்கிறார். தமிழர்களை குழப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். அரசியல் தீர்வுக்கான வாக்கெடுப்பு என்ற தேர்தல் வாக்குறுதியுடன் அவர் நிலைத்திருக்க வேண்டும் என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக 13வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் சி.வி.விக்கினேஸ்வரன் தரப்பும் முயற்சிகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments